ஆயக்கலைகளை கற்றுக் கொள்ள ஒருவருக்கு ஒரு ஜென்மம் போதாது. செக்ஸ் வாழ்க்கையில் புதிது புதிதாக பலவற்றை சோதனை செய்து இன்பத்தை அதிகரிக்க ஆணும் பெண்ணும் முற்படுகிறார்கள். அப்படிப்பட்ட செக்ஸ் வாழ்க்கையை தூண்டவும், இன்பத்தை அதிகரிக்கவும் பல எண்ணெய்கள் உதவி புரிகிறது.
செக்ஸூக்கு பைபிளாக விளங்கும் காமசூத்ராவில், இயற்கை வாசனை திரவியமான இட்டர் மற்றும் வாசனை எண்ணெய்களின் பயன்பாட்டை பற்றி, அதன் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இவ்வகை எண்ணெய்களை காம உணர்வை தூண்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணெய்களில் இருந்து வரும் வாசனை தான் பிட்யூட்டரி சுரப்பியை தூண்டுகிறது. இது மறைமுகமாக காம உணர்வுகளை அதிகரிக்கிறது. இது தான் இந்த முக்கிய எண்ணெய்களை பயன்படுத்துவதின் விளைவாகும். நம் வேதங்களும் இதன் பயன்களைப் பற்றி வஜிகரனா டன்ட்ராவில் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மையை பற்றிய அறிவியல்) பறை சாற்றுகிறது. இப்போது எந்த எண்ணெய் வகைகளுக்கு பாலுணர்வை தூண்டும் குணம் உள்ளது என்று பார்ப்போம்.